--- --:--:-- --

படுக்கை விழுந்து குழந்தை காயமடைந்து தொடர்பாக ரயில்வே விளக்கம்..!

8

ரயில் மேல்படுக்கையில் இருந்து கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த நான்கு வயது குழந்தைக்கு போதிய மருத்துவ வசதி ஏற்பாடு செய்யப்பட்டதாக ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. நாகர்கோயில் கோவில் விரைவு ரயில் நான்கு வயது குழந்தையுடன் பெண் ஒருவர் ரயிலில் ஏறி பயணித்துள்ளார்.

 

பெட்டியில் இருந்த மேல் படுக்கை கீழே விழுந்ததில் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ரயில்வே நிர்வாகம் குழந்தைக்கு முறையாக மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி தரவில்லை என குழந்தையின் தாய் குற்றம் சாட்டியுள்ளார்.

 

இதனிடையே கோயில்பட்டி ரயில் நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் குழந்தையை கோவில்பட்டி அரசு மருத்துவமனை கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் குறித்து குழந்தையின் தாயாரிடம் தெரிவிக்கப்பட்ட போதும் அவர் கோயில்பட்டியில் இறங்க மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.

 

மதுரை ரயில் நிலையத்தில் ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் ஆனால் பயணி அவசரமாக வெளியேறி விட்டதாகவும், ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

 

புகார் தெரிவிக்கப்பட்ட மேல் படுக்கையை ஆய்வு செய்த பொழுது தொழில்நுட்ப கோளாறுகள் எதுவும் இல்லை எனவும் முறையாக பராமரிக்கப்பட்டதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon