தன்னைக் கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு சென்ற நபர்..!
பாகல்பூரில் தன்னை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. பாகல்பூரைச் சேர்ந்த பிரகாஷ் பண்டல் என்பவரை பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து பிரகாஷ் தன்னை கடித்த கண்ணாடிவிரியன் பாம்புடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
இதனால் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் அச்சமடைந்தனர். பாம்பை தோளில் போட்டுக் கொண்டு உலாவிய நபர் அங்கேயே பாம்புடன் படுத்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.





