அரசு பேருந்தில் ஏற்றி செல்லப்பட்ட டயர்கள்..!
பயணிகளுக்காக பேருந்து இயக்கப்பட்டதா என யோசிக்கும் வகையில் திருவள்ளூரில் அரசு பேருந்தின் டயர்கள் ஏற்றி செல்லப்பட்டதால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். திருவள்ளூர் பணிமனையில் இருந்து திருத்தணி நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.
அதில் மொத்தம் 10 பேர் சென்ற நிலையில் மகள் பேருந்தில் ஏற முயற்சித்தனர். ஆனால் பேருந்து முழுவதும் டயர்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான நிறுத்தங்களில் பேருந்து நிறுத்தாமல் செல்லப்பட்டது.
இதனால் பெரும் அதிருப்தி அடைந்தனர். பயணிகளுக்காக தான் பேருந்து இயக்கப்படுகிறதா? இல்லை உதிரிபாகங்களை ஏற்ற செய்யப்படுகிறதா? எனவும் கேள்வி எழுப்பினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





