விமானப்படை தின அணிவகுப்பு..!
தாம்பரம் விமானப்படை தளத்தில் அணிவகுப்பு நிகழ்ச்சியின் பொழுது விமானப்படை வீரர்கள் மூன்று பேர் மயங்கி விழுந்தனர். அதீத வெயில் காரணமாக மூன்று வீரர்கள் மயக்கம் அடைந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்திய விமானப்படையின் இரண்டாவது ஆண்டு விழாவை ஒட்டி விமான படைத்தளத்தில் நூற்றுக்கும் அதிகமான வீரர்களுடன் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இசை வாத்தியங்கள் முழங்க நடைபெற்ற அணிவகுப்பு சிலிர்ப்பை ஏற்படுத்தியது.
இந்த நிகழ்வில் விமானப்படையின் மூத்த அதிகாரிகள் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் பேசிய ஏர் நாஷியல் ஏபிசி நாட்டின் அவசரகால சூழல் அனைத்திலும் முதன்மையாக நிற்பது விமானப்படை தான் என்று பெருமிதம் தெரிவித்தார்.
தீயணைப்பு, வெள்ள பாதிப்புகளில் இருந்து மீட்பு எல்லை பாதுகாப்பு என பல்வேறு இக்கட்டான சூழலில் நாட்டுக்கு முதலில் துணை நிற்பது விமானப்படை தான் என்றும் தெரிவித்தார். மெரினாவில் நடைபெற்ற வான்சாக நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி தமிழக அரசுக்கும் சென்னை மாநகராட்சிக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.





