--- --:--:-- --

தோழிகளை பார்த்து விட்டு வருகிறேன்..மது போதையில் வீடு திரும்பிய மாணவி..!

4

சேலத்தில் தோழிகளை பார்த்து விட்டு திரும்பிய பள்ளி மாணவி மதுபோதையில் வீடு அருகே சாலையில் மயங்கி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

 

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் பள்ளி மாணவி நேற்று காலை தனது பெற்றோரிடம் தோழிகளை பார்க்க செல்வதாக கூறிவிட்டு சென்ற நிலையில் மாணவி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில் நேற்று மாலை வீட்டின் அருகே மாணவி மதுபோதையில் சாலையில் கிடந்துள்ளார்.

 

இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மாணவியை இறக்கிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. மாணவிக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து மாணவி இருசக்கர வாகனத்தில் இறக்கிவிட்டு சென்ற நபர் குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon