ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு வலுக்கும் எதிர்ப்பு..!
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று எதிர் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை சாத்தியமற்றது என்று கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் முறை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது மட்டுமல்ல. நடைமுறையில் செயல்படுத்த சாத்தியமில்லாதது என்று தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளுடன் எந்தவித ஆலோசனையும் இன்றி அவசரமாக ஒப்புதல் வழங்கி இருப்பது பிரதமர் மோடி அரசின் வன்ம நோக்கத்தை வழிகாட்டுகிறது என்று சித்தராமையா கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





