வெறி நாய்கள் கடித்து 25 ஆடுகள் உயிரிழப்பு..!
காங்கேயம் நகராட்சி 3வது வார்டில் தொட்டியப்பட்டி உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்தவர் மோகன் குமார். ஆயில் மில் வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இன்று அதிகாலை இவரது தோட்டத்திற்குள் புகுந்த வெறிநாய் கும்பல் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 25க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே 25-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




