திருச்சி என்ஐடி கல்லூரியில் எம்சிஏ முதலாம் ஆண்டு மாணவி மாயம்..!
திருச்சி என்.ஐ.டி கல்லூரியில் மாணவி ஒருவர் காணாமல் போய் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. துவாக்குடி அருகே உள்ள என்ஐடி கல்லூரி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. அங்கு நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி கல்வி படித்து வருகின்றனர்.
வெளிமாநிலம் மாணவ, மாணவிகள் வெளியிடும் கல்லூரி விடுதியிலும் தங்கி பயின்றனர். கல்லூரி விடுதியில் தங்கி எம்சிஏ முதலாம் ஆண்டு படித்து வந்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த மாணவி கடந்த 15ஆம் தேதி முதல் காணாமல் போயியுள்ளார்.
அவரது செல்போன் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் புகார் குறித்து துவாக்குடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி ஒருவர் மாயமாகி இருப்பதும் அந்த தகவல் நான்கு நாட்களுக்குப் பிறகு வெளியாகி இருப்பதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





