--- --:--:-- --

போராட்டக்காரர்கள் காவல்துறை இடையே தள்ளுமுள்ளு..!

3

ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிம்லா சஞ்சோலி பகுதியில் விதிமீறி மசூதி கட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

 

இதனை கண்டித்து இந்து அமைப்பினர் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். சஞ்சீவி பகுதியில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். மேலும் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து ஒரே இடத்தில் அனுமதியின்றி 5க்கும் மேற்பட்ட நபர்கள் தடை விதித்தனர்.

 

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுப்புகளை தாண்டி செல்ல முயன்றனர். அப்பொழுது காவல்துறையினர் போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

 

தடியடி நடத்தி தண்ணீரை பீய்ச்சியடித்து போராட்டக்காரர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். இதனிடையே இந்த விவகாரத்தில் இமாச்சல் மாநில அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர் கட்சி தலைவர் ஜெயராம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.

 

Right Menu Icon