--- --:--:-- --

அடுத்தகட்ட ஆராய்ச்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள்

Vikram_lander_PTI

சந்திராயன் 2 விண்கலம் மூலம் அனுப்பப்பட்டு நிலவின் மேற்பரப்பில் விழுந்து கிடக்கும் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றாலும் சந்திரயான் திட்டம் 98% வெற்றி பெற்றிருப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் வகையில் ஆர்பிட்டர் விக்ரம் லேண்டர் ,ரோவர், பிரக்யான் ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஜூலை 22ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

 

ஆர்பிட்டரில்ல் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் செப்டம்பர் 7-ஆம் தேதி நிலவில் தரையிறங்க திட்டமிடப்பட்டது. தரையிறங்குவதற்கு சொற்ப தொலைவிலிருந்த நிலையில் விக்ரம் லாண்டரிங் சிக்னல் துண்டிக்கப்பட்டது. இது இஸ்ரோ விஞ்ஞானிகளை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் நிலவை சுற்றி ஆய்வு செய்து வரும் ஆர்பிட்டார் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் சாய்ந்த நிலையில் கிடப்பதை படம் பிடித்து அனுப்பியது.

 

இதையடுத்து விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். மேலும் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தொடர்பு கொள்ளும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டது. விக்ரம் லேண்டருக்கு ஹலோ என்ற மெசேஜையும் நாசாவின் கண்காணிப்பாளர் மூலம் தொடர்பு கொள்ளவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

 

ஆனால் நாஸாவின் முயற்சியும் தோல்வியில் முடிந்தது. நிலவில் இரவுப்பொழுது தொடங்க ஆரம்பித்ததால் அங்கு கடும் குளிரில் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் சூரிய தகடுகளால் இயங்கும் விக்ரம் லேண்டர் செயலிழந்து விடும் என்கின்றனர் விஞ்ஞானிகள். 978 கோடி ரூபாய் செலவில் பூமியிலிருந்து 3.84 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலவை அடைந்த விக்ரம் லேண்டரால் அங்கு கால் பதிக்க முடியாதது ஏமாற்றத்தை அளிக்கிறது.

Leave a Reply

Right Menu Icon