பயணியின் பெல்ட்டில் இருந்த வைரக்கற்கள்..!
டெல்லி விமான நிலையத்தில் 60 லட்சம் ரூபாய் மதிப்புடைய வைரக் கற்கள் பிடிபட்டது. இடுப்பில் அணிந்த பெல்டில் மறைத்து வைத்து வைரங்களை கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.
டெல்லியில் இருந்து துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகருக்கு சென்றிருந்த விமானத்தில் பெருமளவில் வைரம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. விமானத்தில் செல்ல வந்த பயணிகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனையிட்டனர்.
இரண்டு பயணிகளும் அணிந்திருந்த பெல்ட்டில் 83 கிராம் வைரங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரக் கற்களின் மதிப்பு 60 லட்சம் ரூபாய் என்று சர்வதேச சந்தையில் மதிப்பிடப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





