--- --:--:-- --

கனிமொழியிடம் முறையிட்ட மக்கள்..!

3

100 நாள் திட்டத்தின் கீழ் வேலை கொடுப்பதில்லை என தன்னை சூழ்ந்த முறையிட்ட மக்களிடம் அது மத்திய அரசின் திட்டம் என்றும் அது பற்றி பாஜகவினரிடம் கேளுங்கள் என்றும் திமுக எம்பி கனிமொழி பதிலளித்தார்.

 

விளாத்திகுளம் அருகே உள்ள பிள்ளையார் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த சோலை ராஜ் என்பவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து அறிவிக்கப்பட்ட நான்கு லட்சம் ரூபாய் நிவாரண நிதியை தூத்துக்குடி எம்பி கனிமொழி நேரில் சென்று வழங்கினார்.

 

ஆறுதல் கூறிவிட்டு வெளியில் வந்த கனிமொழியை சூழ்ந்து கொண்ட கிராம மக்கள் 100 நாள் வேலைத்திட்டத்தில் சரியாக வேலை வழங்குவதில்லை என முறையிட்டனர். இந்த திட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்குவதில்லை என்றும் இதுகுறித்து பாஜகவினரிடம் கேளுங்கள் என்றும் கனிமொழி எம்பி பதில் அளித்தார்.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon