படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் புகைப்படங்கள் வெளியானதை தடுக்காதது ஏன்?
கொல்கத்தா பயிற்சி மருத்துவமனை விவகாரத்தில் சட்டம் ஒழுங்கை காக்க மேற்குவங்க அரசு தவறிவிட்டதாக உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கொல்கத்தா சீமருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த பொழுது கொலை வழக்கில் எஃப் ஐ ஆர் ஐ பதிவு செய்ய தாமதம் ஏன் என காவல்துறைக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சட்டம் ஒழுங்கை கட்டுப்பாட்டில் வைத்திருக்க மாநில அரசு தவறிவிட்டதாக கண்டித்த நீதிபதிகள் போராட்டக்காரர்கள் மீது அடக்கு முறை, மேலும் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் புகைப்படங்கள் வெளியானதை சுட்டி காட்டிய நீதிபதிகள் இந்த விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினர்.
இந்த விவகாரம் நாட்டில் மருத்துவர்களின் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளையும் எழுப்பி உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கின் விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிட்ட தலைமை நீதிபதி அமர்வு பயிற்சி மருத்துவரின் குறைகளை இருக்க தேசிய அளவில் குழு அமைக்கவும் ஆணையிட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





