திருவாடானையில் அரசு மருத்துவமனை அவல நிலையை கண்டித்து கண்டன தர்ணா போராட்டம்..!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் தற்பொழுது வரை அரசு மருத்துவர்கள் நியமிக்கப்படாமல் பொறுப்பு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் காலை 10 மணிக்கு வருவதோடு 12 மணிக்கெல்லாம் மருத்துவமனை விட்டு செல்கின்றனர். இதனால் 12 மணிக்கு மேல் இருந்து இரவு முழுவதும் நோயாளிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். கானாட்டாங்குடி மக்கள் தொடர்பு திட்ட முகாமிற்கு ஆர12ம் தேதி வந்த மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித சிங் கலோளிடம நேரில் தகவல் தெரிவிக்கப்பட்டது, ஆனால் இதுவரை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தலைமை மருத்துவமனையில் ஸ்கேன் , எக்ஸ்ரே, மற்றும் ரத்த பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அலுவலர்கள் யாரும் இல்லை, இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.தாலுகா தலைமையிடமாக மட்டுமல்லாமல் திருவாடானை சட்டமன்ற தொகுதியின் தலைமையிடமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் கரு மாணிக்கம் போதிய மருத்துவர்கள் இல்லை என்று சட்டப்பேரவையில் தெரிவித்தார் அதற்கும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் திருவாடானை மார்க் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
இந்த தர்ணா போராட்டத்திற்கு தாலுகா செயலாளர் ஜெயகாந்தன் தலைமையில் மூத்த உறுப்பினர் நாகநாதன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்கம் முன்னாள் தாலுகா செயலாளர் சேதுராமன் உள்ளிட்டவர்கள் தர்ணா உரையாற்றினார்கள்.பேருரையாக கருணாகரன் உரையாற்றினார்.
இவர்களது உரையில் விரைவில் மருத்துவர்கள் செவிலியர்கள் எக்ஸ்ரே உள்ளிட்ட டெக்னீசியர்கள் உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டும் இலையில் அடுத்தடுத்து தொடர் போராட்டங்களை நடந்து போவதாகவும் எச்சரிக்கை தெரிவித்தனர். திருவாடானை காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
📱 Share on WhatsApp 𝕏 Share on X




