--- --:--:-- --

பிறந்து 8 நாட்களே ஆன குழந்தை.. நண்பனுக்கு விற்ற தந்தை..!

4

சென்னையில் பிறந்து 8 நாட்களே ஆன ஆண் குழந்தையை 2 லட்சம் ரூபாய்க்கு விற்ற தம்பதி குழந்தையை திரும்ப வாங்கி தருமாறு போலீசில் புகார் அளித்துள்ளனர்.

 

வியாசர் பாடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சத்யராஜ் – ஷ்யாமளா தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவதாக கருத்தரித்த சியாமளாவிற்கு குழந்தை பிறந்ததும் தங்களிடம் தருமாறு சத்திய தாசின் நண்பர் கணேசன் – சரண்யா தம்பதியினர் கேட்டதாக கூறப்படுகிறது.

 

குழந்தை பிறக்கும் முன் 25 ஆயிரம் ரூபாய் முன் பணம் பெற்றுக் கொண்ட சத்தியதாஸ் தம்பதி குழந்தை பிறந்ததும் பணத்தை வாங்கிக் கொண்டு குழந்தையை கொடுத்து அனுப்பியதாக தெரிகிறது. இந்நிலையில் பிறந்த ஆண் குழந்தையை பிரிய மனம் இல்லை எனக் கூறி கணேஷ் தம்பதியின் மீது சியாமளா போலீசில் புகார் அளித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon