திருவாடானையில் உலக அமைதி வேண்டி கஞ்சிக்குடம் சுமந்து தேசிய கொடியுடன் ஊர்வலம்..!
திருவாடானை அருகே உலக அமைதி வேண்டி மேல்மருவத்தூர் வழிபாட்டு மன்றம் சார்பில் ஏராளமான பெண்கள் கஞ்சிக்குடம் சுமந்து தேசிய கொடியுடன் ஊர்வலமாக சென்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பாரதி நகர் பகுதியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆதிபராசக்தி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் பெண்கள் கஞ்சிக்கலையும் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
அதன்படி இன்று கல்லூர் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்டு அங்குள்ள முத்து மாரியம்மன் கோவில் வழியாக மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் ஊர்வலமாக சென்று ஆதிபராசக்தி அம்மன் கோவிலை வந்தடைந்தனர்.

இந்நிலையில் இன்று 78வது குடியரசு தினத்தை நாடு முழுவதும் கொண்டாப் பட்டுவரும் நிலையில் இந்த கஞ்சி கலைய ஊர்வலத்தில் ஒருவர் தேசிய கொடியை ஏந்தி கஞ்சி கலையத்தை சுமந்து வந்தார்.
உலக நன்மைக்காகவும், பொது அமைதி வேண்டியும், மக்கள் நோய் நொடியின்றி வாழவும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் கஞ்சி கலயம் சுமந்து தீச்சட்டி ஏந்தியும் தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். அதன் பிறகு இதில் கலந்துகொண்ட பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.






