--- --:--:-- --

திருப்பூர் அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 78 ஆவது சுதந்திர தின விழா

4

திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி நகராட்சி, அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 78 ஆவது சுதந்திர தின விழா மற்றும் இந்திய அரசியல் அமைப்பு முகப்புரை கல்வெட்டு திறப்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.

 

விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் நா. குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்திய அரசியலமைப்பு முகப்புரை கல்வெட்டினை திறந்து வைத்தார்.

 

தொடர்ந்து தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் ஜே. ஆர். சி மற்றும் என்.சி.சி மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் சுதந்திர தினம் குறித்து பல்வேறு தலைப்புகளில் ஆங்கிலம் மற்றும் தமிழில் பேசியும், கவிதை வாசித்தும் அசத்தினர். பள்ளியின் என்.சி.சி பயிற்சியாளரும், ஏ கிரேடு சான்றிதழ் வாங்கியவருமான மாணவர் கிருஷ்ணாவை பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

 

விழாவில் முன்னாள் தலைவர்கள் கோபால், ராமசாமி, துணைத்தலைவர் விசுவநாதன், கவுன்சிலர் பாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் முத்துக்குமார் நன்றி கூறினார்.

 

Right Menu Icon