பிரபலமடையும் ஆசையில் இளைஞர் செய்த அதிர்ச்சி செயல்..!
பிரபலமடைய வேண்டும் என்ற நோக்கில் எடப்பாடி காவல் நிலையத்தில் இளைஞர் ஆதித்யா பெட்ரோல் குண்டு வீசி உள்ளதாக சேலம் காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையத்தில் இன்று அதிகாலை மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளி தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் குற்ற செயலியில் ஈடுபட்ட எடப்பாடி பகுதியைச் சேர்ந்த ஆதித்யா என்ற 20 வயது இளைஞனை தடைப்படை போலீசார் கைது செய்தனர்.
youtube, பேஸ்புக் பார்த்து ரவுடிசம் செய்தால் தான் தனது பெயர் பிரபலமாகும் நோக்கில் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக கைது செய்யப்பட்ட இளைஞர் வாக்குமூலம் அளித்ததாக எஸ்.பி. அருள் கபிலன் தெரிவித்தார்.






