--- --:--:-- --

திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய இளைஞர்..காதலி புகார்..!

10

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் முன்பு இளம்பெண் உறவினர்களோடு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

 

நாகர்கோவிலை சேர்ந்த சந்தோஷும் மதுரையைச் சேர்ந்த இளம் பெண்ணும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்த பெண்ணை தனிமையில் சந்தித்த சந்தோஷ் பின்னர் சாதியை காரணம் காட்டி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

 

சந்தோஷ் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி அந்த பெண் தனது குடும்பத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

 

Right Menu Icon