பக்கத்து வீட்டில் வீடு கட்டிய 4 பேர்..வீட்டை தூக்கி வைக்க முயற்சி..!
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியில் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தென்றல் நகரில் ஒருவர் தனது இடத்திற்கு பதிலாக பக்கத்து வீட்டுக்காரர் இடத்தில் வீடு கட்டியுள்ளார். இது தற்பொழுது தெரிய வந்த நிலையில் வீட்டை நகர்த்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
1500 சதுர அடியில் கட்டிய வீட்டை அப்படியே ஐந்து அடி தூரத்திற்கு நகரத்த சென்னையில் உள்ள வீட்டை நகர்த்தும் நிறுவனம் ஒன்றை நாடியுள்ளார். 342 ஜாக்கிகளை பயன்படுத்தி மூன்று அடிக்கு உயர்த்தி அருகே உள்ள அவரது நிலத்திற்கு மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் இதற்காக 7 லட்சம் ரூபாய் செலவானதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.





