நெஞ்சு வலியால் உயிரிழந்த டிரைவர் குடும்பத்திற்கு சக நண்பர்கள் நிதி உதவி..!
நெஞ்சு வலியால் உயிரிழந்த கண்டெய்னர் லாரி ஓட்டுநர் குடும்பத்திற்கு சென்னை துறைமுகம் கன்டெய்னர் லாரி ஓட்டுநர்கள் சார்பாக நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த அருள் என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 15ஆம் தேதி பண்டிகையின் பொழுது அருண் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார்.
சென்னை துறைமுகம் கண்டெய்னர் ஓட்டுனர் சங்கம் சார்பில் நிதி திரட்டி உள்ளனர். சுமார் 3,000 பேரிடம் இருந்து வசூல் செய்யப்பட்ட ஐந்து லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை அருள் குடும்பத்தினரிடம் வழங்கினார்.






