--- --:--:-- --

கேரளாவில் அதீத கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

2

கேரளாவில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவின் வயநாடு தொகுதியில் நேற்று இரவு கனமழை பெய்தது. இந்த கனமழையை தொடர்ந்து அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது.

 

அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை ஹெலிகாப்டர் மூலமாக மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

இதனிடையே கேரளாவில் காசர்கோடு, கண்ணூர், வயநாடு, மலப்புரம், திருச்சூர், இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருந்தால் அங்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon