--- --:--:-- --

மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ள பச்சிளம் குழந்தை..!

2

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே தீவிர மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 10 மாத குழந்தையை காப்பாற்றி தரவேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது குழந்தையின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

செங்கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி – நந்தினி தம்பதி கூலி தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகன் உள்ள நிலையில் 10 மாதங்களுக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது.

 

அண்மையில் இந்த குழந்தைக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதால் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் உடல்நிலை சரியாகாததால் குழந்தை பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

 

அங்கு குழந்தையை சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளது. உதவி கேட்டு திருப்பதி – நந்தினி தம்பதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

 

பாதிக்கப்பட்ட குழந்தையை அழைத்து வந்தால் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க ஆலோசிக்கலாம் என்று பெற்றோருக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

 

Right Menu Icon