மணலால் நிரம்பிய அதிசய கிணறு..!
நெல்லை மாவட்டம் ஆயர் குளம் பகுதியில் உள்ள அதிசய கிணற்றில் மணல் நிரம்பி உள்ளதால் அதனை தூர்வார மக்கள் வலியுறுத்தியுள்ளனர். பல்லாயிரம் கன அடி நீரை உள்வாங்கியும் நிறம் மாறுதால் இந்த கிணற்றை அதிசய கிணறு என அந்த பகுதி மக்கள் அழைக்கின்றனர்.
இதனை ஆய்வு செய்த குழுவினர் கிணற்றை முறையாக பராமரித்தால் அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.





