--- --:--:-- --

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுட்டுக்கொலை..!

1

லங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தம்மிகா நிரோஷனா சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தம்மிகா நிரோஷனா தனது குடும்பத்தினருடன் அம்பலாங்கொடாவிலுள்ள அவரது இல்லத்தில் வசித்துவந்துள்ளார்.

 

இந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமை இரவு தம்மிகா நிரோஷனா தனது இல்லத்தில் மனைவி மற்றும் குழந்தைகளின் முன்னிலையிலேயே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தையடுத்து வந்த போலிசார் அவரது உடலை மீட்டு, உடற்கூறாய்விற்கு அனுப்பியுள்ளனர்.

 

இந்த சம்பவத்தை செய்தவர்கள் யார் என்றும், எதற்காக செய்தார்கள் என்றும் இதுவரை தெரியவில்லை என போலிசார் தெரிவிக்கிறார்கள். கடந்த 2000-ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டனாக தம்மிகா நிரோஷனா  இருந்துள்ளார். இவர் ஏஞ்சலோ மேத்யூஸ், உபுல் தரங்கா, தினேஷ் சண்டிமல் உள்ளிட்டவர்களை தனது அணியில் வைத்து கேப்டன்சி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Right Menu Icon