--- --:--:-- --

தரமற்ற வீடுகள்..கேள்வி எழுப்பிய கூட்டமைப்பு தலைவர்..!

4

கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தரமின்றி கட்டப்பட்டு வரும் வீடுகள் குறித்து கேள்வி எழுப்பிய முகாமின் கூட்டமைப்பு தலைவர் ஒப்பந்ததாரர் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெட்டிக்குப்பம் ஊராட்சி இலங்கை மறுவாழ்வு முகாம் உள்ளது.

 

இங்கு அரசு சார்பாக வீடுகள் கட்டும்பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டிடங்களின் அடித்தள அமைப்பு சான்று காணப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

 

இதை சரி செய்யும் படி கும்முடிபூண்டி இலங்கை தமிழர் முகாமின் கூட்டமைப்பு தலைவர் சிவகுமார் என்பவர் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களிடம் தெரிவித்துள்ளார். அதற்கு ஒப்பந்ததாரர் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக அதிகாரிகளிடம் சிவக்குமார் புகார் அளித்தார்.

 

மேலும் மறுவாழ்வு மையத்திற்கு வந்திருந்த அதிகாரிகளிடம் இளைஞர்கள் விளையாட்டு மைதானத்தில் வீடுகள் கட்டுவதை தவிர்த்து மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

 

Right Menu Icon