பள்ளியின் பூட்டு உடைப்பு..பொருள்கள் சேதம்..பெற்றோர்கள் அதிர்ச்சி..!
ஆர்எஸ் மங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மர்ம நம்பர்கள் பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர்.. பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரச்சனை தொடர்பாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் உப்பூர் அருகே நாகனேந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 15 மாணவர்களின் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் வார விடுமுறை முடிந்து கடந்த 8ம் தேதி ஆசிரியர்கள் மாணவர்கள் பள்ளி வந்த போது பள்ளியின் பூட்டு உடைக்கப்பட்டு குழந்தைகள் அமரும் சேர்கள், பீரோ, மற்றும் பள்ளியில் இருந்த ஆவணங்கள், புத்தகங்கள் அனைத்தும் சேதப்படுத்தப்பட்டு இரைத்து கிடந்தன.

மேலும் காலி மதுபாட்டில்கள் வகுப்பறைக்குள் கிடந்ததாகவும் சொல்லப்படுகிறது.இதை கண்ட மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து தங்களது பிள்ளைகளை வீட்டுக்கு கூட்டிச் சென்று உரிய நடவடிக்கை எடுக்கும் வரை பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு நிலவி வந்தது.

இந் நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் மலைராஜ் திருப்பலைக்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். தகவலறிந்து வந்த மாவட்ட கல்வி அதிகாரி பிரின்ஸ் வட்டாரகல்வி அலுவலர் தமிழ்செல்வி, புகாரின் அடிப்படையில் திருப்பாலைக்குடி காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷகுமார்தார் விசாரித்து சம்மந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் பேரில் மாணவர்ககள பள்ளிக்கு அனுப்பினர்





