--- --:--:-- --

கத்தியபடி அலறி ஓடிய சிறுமி..பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாதிரியார்..!

2

காஞ்சிபுரத்தில் தாயை இழந்து சர்ச் பாதர் பாதுகாப்பில் விடப்பட்ட 14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறி, பாதிரியார் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

 

அந்த சிறுமியின் தந்தை அதே தேவாலயத்தில் தோட்ட தொழிலாளியாக உள்ளதாக தெரிகிறது. மனைவி இறந்ததால் மகளை கவனித்துக் கொள்ள சிரமமாக இருந்ததால் தான் வேலை செய்யும் சர்ச்சிலேயே மகளை தங்க வைத்ததாகவும் சில தினங்களுக்கு முன் சர்ச்சில் பாதிரியாராக உள்ள தேவ இரக்கம் என்பவர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

 

சிறுமி அழுதபடி ஓடியதை பார்த்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பெயரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon