--- --:--:-- --

விழுப்புரத்தில் சாராயம் குடித்து உடல் நலம் பாதித்த 4 பேர்..ஒருவர் பலி..!

3

விழுப்புரம் அருகே சாராயம் குடித்ததால் உடல் நலம் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று பேரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

குமார்,ஜெயராமன், முருகன் மற்றும் சிவச்சந்திரன் ஆகியோர் கடந்த சனிக்கிழமை சாராயம் குடித்த பிறகு வயிற்றில் எரிச்சல் ஏற்பட்டதால் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

ஜெயராமன் வெள்ளிக்கிழமையிலிருந்து சாராயம் குடித்ததாக கூறப்படும் நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். புதுச்சேரியில் இருந்து சாராயத்தை கடத்தி வந்ததாக முருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon