--- --:--:-- --

மத்திய அரசுக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம்..!

9

புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

தண்டனைச் சட்டம் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் இந்திய சாட்சி சட்டம் ஆகியவற்றில் மத்தியரசு மாற்றங்கள் செய்து 3 புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த புதிய சட்டங்கள் நாடு முழுவதும் வந்துள்ளன.

 

புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் பல்வேறு போராட்டத்தில் மேற்கொண்டனர். திண்டுக்கல், கும்பகோணம், ஸ்ரீவில்லிபுத்தூர், ராதாபுரம், நாகர்கோயிலில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணியை புறக்கணித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதைப்போல விருத்தாச்சலம் பொன்னேரியின் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்டிப்பட்டி மற்றும் புதுச்சேரியிலும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணி புறப்பணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Right Menu Icon