--- --:--:-- --

பெண் மிரட்டியதால் பயந்து கொண்டு குடும்பத்தோடு உயிரை விட துணிந்த நபர்..!

8

புதுச்சேரி அருகே ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்தவர் மனைவி, குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

புதுச்சேரி அருகே வெள்ளியனூரில் வசித்து வரும் விஜயகாந்த் என்பவர் ஆன்லைன் விளையாட்டில் அதிக பணத்தை இழந்ததாகவும் இதனால் தனது நண்பர்கள் பலரிடம் கடன் வாங்கி விஜயகாந்த் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் தனது மனைவியை மற்றும் ஒரு வயது குழந்தையுடன் எலி மருந்து தின்று விஜயகாந்த் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். புதுச்சேரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது மூன்று பேரும் மயங்கி விழுந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு கதர் கிராமம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே விஜயகாந்த் தனது சட்டை பையில் எழுதி வைத்திருந்த கடிதத்தில் எம்என் குப்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் கடனுக்காக தன்னிடம் இருந்து பணத்தை வாங்கி வைத்துக்கொண்டு பணம் எதுவும் தராமல் ஏமாற்றியதுடன் 5 லட்சம் ரூபாய்க்கு மிரட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon