ரேஷன் அரிசிகளை கடத்தி ரவை தயாரிக்கும் கும்பல்..!
தாம்பரத்திலிருந்து ரேஷன் அரிசிகளை கடத்தி அவற்றில் இருந்து ரவை தயாரித்து அண்டை மாநிலங்களுக்கு விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தாம்பரம் மேற்கும் கரணை பகுதியில் சுற்றியுள்ள ரேஷன் கடைகளில் இருந்து நாள்தோறும் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசிகள் கடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே ரேஷன் அரிசிகளை கடத்தி அவற்றிலிருந்து ரவை தயாரித்து அண்டை மாநிலங்களுக்கு விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கள்ளத்தனமாக ரவை தயாரிக்கப்பட்டு மூட்டை மூட்டையாக மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. உணவுப் பொருள் வழங்கும் அதிகாரிகள் இதனை கண்டு கொள்வதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.





