--- --:--:-- --

மன அழுத்தம் காரணமாக பெண் மருத்துவர் இடத்தில் விபரீத முடிவு..!

Tired doctor

Portrait of a tired, exhausted female doctor

ராசிபுரத்தில் பெண் மருத்துவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கோனார் பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவர் தேனி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்துவிட்டு நேர்முக தேர்வுக்கு தயாராகி வந்தார்.

 

பிரியதர்ஷினி கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று வீட்டில் யாரும் இல்லாத பொழுது அவர் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக ராசிபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon