பாலியல் தொல்லை கொடுத்த சாமியார்..கதறிய 14 வயது சிறுவன்..!
14 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சாமியார் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தம்பதி கருத்து வேறுபட்டால் ஒருவரை ஒருவர் பிரிந்த நிலையில் தம்பதியின் குழந்தைகளான இரு சிறுவர்கள் தந்தையுடன் வசித்து வந்துள்ளனர்.
தொழில் விஷயமாக அடிக்கடி வெளியூர் சென்ற தந்தை தன் இரு மகன்களையும் உறவினர் வீட்டில் விட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில் உறவினர் வீட்டிற்கு பூஜை செய்ய வந்த மூன்று சிறுவர்களில் ஒருவரை தனியே அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
சிறுவன் அளித்த தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சென்னை மேற்கு மாம்பழத்தைச் சேர்ந்த சாமியார் ஹரிஷ் உட்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





