--- --:--:-- --

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு..!

2

மைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஜூலை 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழக மின்வளத்துறை அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த 2001 முதல் 2006 வரை அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழக வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்தார்.

 

அப்பொழுது வருமானத்திற்கு அதிகமாக 4 கோடி அளவில் சொத்து சேர்த்ததாக அனிதா ராதாகிருஷ்ணன் அவரது மனைவி, மகன்கள் சகோதரர்கள் உடைய 7 பேர் மீது கடந்த 2026 ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.

 

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த பொழுது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது மனைவி ஜெயகாந்தி மற்றும் சகோதரர்களுடன் ஐந்து பேர் ஆஜராகாத நிலையில் அனிதா ராதாகிருஷ்ணனின் மகன்கள் மட்டும் வழக்கு விசாரணைக்காக தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில் விசாரணை வரும் ஜூலை மாதம் 10ம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Right Menu Icon