--- --:--:-- --

சென்னையில் துடிதுடித்து பலியான கல்லூரி மாணவர்..!

10

சென்னை நந்தம்பாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் நீதிபதி பாண்டியன் மணப்பாக்கம் அம்பேத்கர் பிரதான சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற பொழுது தனியார் பள்ளி பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

 

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த நீதிபதி பாண்டியன் தலையில் பஸ் சக்கரம் ஏறி இறங்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி இறந்தார்.

 

பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனியார் பள்ளி பஸ் ஓட்டுநர் சரவணன் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

Right Menu Icon