கிறிஸ்தவ தம்பதியினருக்கு நெற்றியில் திருநீறு பூசிய நபர்கள்
உதகையில் கிறிஸ்தவ மத பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறி தம்பதியரை வற்புறுத்தி திருநீறு பூசி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த ஒரு பகுதியை சேர்ந்த ஜான், ஜெனிஃபர் தம்பதியினர் ஒரு அப்பகுதியில் மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதுடன் வீடுவீடாக துண்டு பிரசுரங்கள் விநியோகித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சிலர் தம்பதியரை மிரட்டியதுடன் நெற்றியில் திருநீறு பூச வற்புறுத்தினர். அச்சமடைந்த தம்பதியினர் திருநீறு பூசிக்கொண்டு நிலையில் அங்கிருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து இத்தம்பதியினர் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




