நீட் தேர்வு முறைகேட்டில் அடுத்தடுத்து கைதாகும் பயிற்சி மைய ஆசிரியர்கள்..!
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கைது செய்யப்பட்ட பயிற்சி மைய ஆசிரியர்கள் இரண்டு பேரையும் ஜூலை இரண்டாம் தேதி வரை விசாரிக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வில் அதிக மதிப்பெண் கிடைப்பதற்கு நடைபெற்ற மெகா மோசடி தொடர்பாக குஜராத், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பயிற்சி மையத்தின் நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் உள்ள நீட் பயிற்சி மைய ஆசிரியர்கள் துக்காரா மற்றும் ஜலின் உமர் கானல் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரித்த நீதிமன்றம் ஜூலை இரண்டாம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





