--- --:--:-- --

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை..!

4

ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் பட்ஜெட்டில் கூடுதல் நிதி சலுகைகள் வழங்க வேண்டும் என ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

2024- 2025 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு பல்வேறு தொழில்துறை அமைப்புகளுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நாட்டின் ஏற்றுமதியாளர்களுடன் மத்திய நிதியமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

 

அப்பொழுது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு கூடுதல் நிதி சலுகைகள் வழங்க வேண்டும் என்றும் வட்டி சமன்படுத்துதல் திட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

 

முன்னதாக நாட்டின் சரக்கு மற்றும் சேவைகள் ஏற்றுமதி 2017-2018 ல் 39 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில் 2023- 2024 ல் சுமார் 64 லட்சம் ரூபாய் கோடி ரூபாயாக அது அதிகரித்துள்ளது. இந்நிலையில் இதனை 2030-ம் ஆண்டுக்குள் இரண்டு டிரில்லியன் அமெரிக்கன் டாலர்களாக உயர்த்த அரசு உதவி செய்ய வேண்டும் என ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon