பிராய்லர் கோழி சமைத்து சாப்பிட்ட குடும்பம்.. கண் முன் துடிதுடித்து உயிரை விட்ட மகன்..!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வயிற்று வலி ஏற்பட்டு எட்டு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் அருகே உள்ள கெரமங்கலம் பனந்தோப்பு காலனியைச் சேர்ந்த தம்பதி மணி – ரம்யா.
இவர்களுக்கு எட்டு வயதில் சரண் என்ற மகனும், 7 வயதில் மகளும் உள்ளனர். குடும்பத்தோடு அனைவரும் பிராய்லர் கோழியை சமைத்து சாப்பிட்டு உள்ளனர். இதில் சரணுக்கு மட்டும் வயிற்று வலி ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளான்.
அவருக்கு கெரமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார். இரவு நேரத்தில் மீண்டும் சரணுக்கு வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மீண்டும் சிறுவன் கெரமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஓசூர் மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தான். இதுகுறித்து சிறுவனின் தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





