கால்வாய்க்குள் சிக்கித் தவித்த குட்டி யானையை மீட்டு தாயுடன் சேர்த்த வனத்துறையினர்..!
நீலகிரி மாவட்ட முதுமலை வனப்பகுதியில் கால்வாய்க்குள் சிக்கிதவித்த குட்டி யானையை மீட்ட வனத்துறையினர் அதனை மீண்டும் தன் தாயிடம் சேர்த்தனர். வனப்பகுதியில் பிறந்து மூன்றே நாட்களே ஆன குட்டியானை ஒன்று கால்வாய்க்குள் விழுந்து வெளியே வர முடியாமல் தவித்தது.
குட்டியை மீட்க முடியாமல் தாயின் அருகிலேயே சோகத்துடன் சென்றது. இதனைக் கண்ட வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு தாய் யானையை அந்த பகுதியில் இருந்து சிறிது தூரத்திற்கு விரட்டினார்.
பின்னர் கால்வாய்க்குள் தவித்துக் கொண்டிருந்த குட்டியை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து குட்டியானை அதன் தாய் யானையுடன் சேர்க்கப்பட்டது. இந்நிலையில் இரு யானைகளும் கொஞ்சி விளையாடும் காட்சி வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





