கம்ப்யூட்டரில் தோண்ட தோண்ட அதிர்ச்சி..!
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் போலியாக பயனாளர்கள் பெயரை சேர்த்து 80 லட்சம் சதி செய்த புகாரில் தலைமறைவான சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் தற்காலிக கணினி ஆப்ரேட்டர் ரேவதியை போலீசார் தேடி வருகின்றனர்.
ரேவதிக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் அவரது தாயார் சடையம்பட்டி ஊராட்சி செயலாளருமான தெய்வானை மீதும் வழக்கு பதிவு செய்த அவரையும் தேடி வருவதாக போலீசார் கூறினார்.
சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கடந்த மாதம் அளித்த புகாரின் பேரில் ரேவதியின் கணினியை ஆய்வு செய்த பொழுது முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





