--- --:--:-- --

தந்தையை 3 வயது குழந்தை தட்டி எழுப்பிய நெஞ்சை உலுக்கும் காட்சி..!

4

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் பலர் உயிரிழந்த நிலையில் நீதிமன்ற வளாகம் அருகே ஒருவர் போதையில் மயக்கம் அடைந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகம் குதிரை சின்ன மணி என்பவர் மயக்க நிலையில் படுத்திருந்தார்.

 

அருகே அவரது மூன்று வயது  குழந்தை தனது தந்தையை தட்டி எழுப்பும் காட்சிகள் வேதனையை ஏற்படுத்தின. தகவலறிந்து வந்த காவல்துறையினர் எழுப்பி விசாரித்த பொழுது விஷ சாராயத்தால் உறவினர்கள் இறந்துவிட்ட சோகத்தில் தாமும் விஷ சாராயம் அருந்ததியதாக கூறினார்.

 

உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்த காவலர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். போதை தெளிந்த பிறகு அவரிடம் மீண்டும் விசாரித்ததில் அவர் டாஸ்மாக் மதுவை அருந்தியதாக தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon