மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்.. கடைசியில் அதிர்ச்சி..!
மும்பை மாநகராட்சி தலைமை அலுவலகம் மருத்துவமனை உள்ளிட்டவைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 50க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு ஈமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
அந்த மெயிலில் மருத்துவமனை படுக்கைகளிலும், கழிப்பறைகளிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து காவல்துறையினரும் வெடிகுண்டு நிபுணர்களும் மருத்துவமனையில் சோதனை மேற்கொண்டனர். ஆனால் அங்கு சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.
இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரிய வந்தது. மும்பை மாநகராட்சி தலைமை அலுவலகத்திற்கும் ஈமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதனையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்ட நிலையில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் கைப்பற்ற படாததால் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என காவல்துறையினர் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





