வாடகை தராததால் ஹவுஸ் ஓனர் எடுத்த வித்தியாசமான முடிவு..!
காஞ்சிபுரத்தில் வாடகை தராததால் மாடி வீட்டின் படிக்கட்டுகளை உரிமையாளர் உடைத்த நிலையில் வெளியேற முடியாமல் தவித்த குடும்பம் தீயணைப்பு துறையால் மீட்கப்பட்டது.
காஞ்சிபுரம் வானவில் நகரின் சீனிவாசன் என்பவர் வீட்டின் மாடி குடியிருப்பை வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் பக்கவாதம் ஏற்பட்டு வேணுகோபால் படுத்த படுக்கையானதால் வாடகை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
6 மாதங்களாக வாடகை செலுத்தாததால் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி அவகாசம் வழங்கிய ஸ்ரீனிவாசன் வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளார். ஆனால் வாடகையும் செலுத்தாமல் வீட்டையும் காலி செய்ய மறுத்து காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.
அதையடுத்து வீட்டின் மாடிக்கு செல்லும் படிக்கட்டுகளை ஆட்கள் மூலம் ஸ்ரீனிவாசன் உடைத்து எடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வேணுகோபால் குடும்பத்தினர் காவல்துறைக்கு புகார் அளித்தனர்.
விரைந்து சென்ற காவல்துறையினர் தீயணைப்புத் துறையினர் மூலம் ஏணி வைத்து மாடியில் இருந்தவர்களை மீட்டு அவர்களது உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





