--- --:--:-- --

ராகுல் காந்தியின் ராஜினாமா ஏற்பு..!

3

ராகுல் காந்தியின் வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ள மக்களவை செயலகம் வயநாடு தொகுதி காலியானதாக அறிவித்துள்ளது.

 

கேரளாவில் வயநாடு தொகுதியிலும், உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். ஆனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி இரண்டு தொகுதிகளில் இருந்து மக்களவைக்கு தேர்வான நபர் இரண்டில் எந்த தொகுதியில் எம்.பி.யாக நீடிப்பது என்பது குறித்து 14 நாட்களில் முடிவு செய்ய வேண்டியது கட்டாயம்.

 

அதன்படி வயநாடு தொகுதியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இந்த நிலையில் ராகுல் காந்தியின் வயநாடு எம்.பி ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ள மக்களவை செயலகம் வயநாடு தொகுதியில் காலியானதாக அறிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon