--- --:--:-- --

கோயில் நிலத்தில் திருமண மண்டபம்..அறிக்கை தர ஆணை..!

2

கோயில் நிலங்களில் திருமண மண்டபம் தங்கும் விடுதி கட்ட தடை விதிக்க அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

அறநிலையைத் துறை விதிகளுக்கு எதிராக கோவில் நிலத்தில் திருமண மண்டபம் தங்கும் விடுதியில் கட்டுவது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி ஆர்.மகாதேவன் முன், விதிகளுக்கு முரணாக பதினாறு கோயில் நிலையங்களில் தங்கும் விடுதிகள் கட்டப்படுவதாக மனுதாரர் குற்றம் சாட்டினார்.

 

கும்பகோணம் நாகேஸ்வர ஸ்வாமி கோயில் நிலத்தில் கட்டுமான பணி நடைபெறுவதாகவும் எம்எல்ஏ உத்தரவின்படி அறநிலையத்துறை அதிகாரிகள் செயல்பட்டது சட்டவிரோதம் எனவும் மனுதாரர் தரப்பு வாதிட்டது. அப்போது எதன் அடிப்படையில் எம்எல்ஏ செயல்பட்டார்.

 

அவருக்கு என்ன அதிகாரம் உள்ளது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். திருமண மண்டபம், தங்கும் விடுதி கட்டும் விவகாரத்தில் எம்எல்ஏ ஆலோசனை மட்டுமே வழங்கியதாக அதிகாரிகளுக்கு உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை எனவும் அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

 

பக்தர்கள் வசதிக்காக அனைத்து அனுமதிகளையும் பெற்ற பிறகு விடுதிகள் கட்டப்பட்டதாக முழு விவரங்கள் அடங்கியதை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon