--- --:--:-- --

தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்..!

7

தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் உடைய பேருந்துகளை வரும் 18ஆம் தேதி காலை வரை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இயங்கும் வெளி மாநில பதிவெண் பெற்ற ஆம்னி பேருந்துகளை ஜூன் 14ஆம் தேதி முதல் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

 

இது தொடர்பாக போக்குவரத்து ஆணைய தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கால அவகாசம் வழங்க மறுக்கப்பட்டது. இதையடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சந்தித்து தொடர் விடுமுறை காரணமாக கால அவகாசம் வேண்டி கோரிக்கை வைத்தனர்.

 

அமைச்சர் மற்றும் போக்குவரத்து துறை ஆணையர் பரிசீலனை செய்தனர். தொடர் விடுமுறை காரணமாக பயணிகளின் நலன் கருதி வரும் 18ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை வரை தமிழகத்தில் வெளி மாநில பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

 

இதைத்தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் தமிழக அரசுக்கு அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துக் கொண்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon