--- --:--:-- --

அலுமினிய பாத்திரம் தொழிற்சாலையை மூட வேண்டும்..கேன்சர் நோய் பரவுவதால் மக்கள் அச்சம்..!

6

திருவட்டாறு அருகே அலுமினிய பாத்திர ஆலை மற்றும் அலுமினிய பாத்திரங்களுக்கு ஆசிட் ஏற்றும் தொழிற்சாலையை மூடக்கோரி கண்ணில் கருப்பு துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டறு அருகே ஆத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆனந்தன் விலை குடியுரிமை பகுதிகளில் கேன்சர் நோய் பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அலுமினிய பாத்திர கடை மற்றும் ஆசிட் ஏற்றும் தொழிற்பிரிவை மூடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

குமரி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் கண்களில் கருப்பு துணி கட்டியும் தமிழ்நாடு தலித் இயக்கம் சார்பில் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆலையை மூடக்கோரி வலியுறுத்தினர். மேலும் திருவட்டார் காவல் நிலைய ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கன்னட கோஷங்களை எழுப்பினர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon