--- --:--:-- --

புதுச்சேரியில் ஹாஸ்பிட்டலில் அழுகிய உடல்கள்..!

9

புதுச்சேரி ஏனாம் அருகே ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் உடலை பல மணி நேரமாக நோயாளியின் படுக்கையில் வைத்ததால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

பிரசாத் என்ற மாணவன் ஆற்றில் குளித்த பொழுது திடீரென நீரில் மூழ்கி பலியானார். ஏனாம் மருத்துவமனைக்கு உடல் கொண்டு செல்லப்பட்ட நிலையில் பிணவறை குளிரூட்டி பழுதானதால் மாணவனின் உடல் நோயாளி படுக்கையிலேயே பலமணி நேரமாக வைக்கப்பட்டிருந்தது.

 

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனை வாசலிலே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சில வாரங்களாக குளிரூட்டி பழுதாகி கிடப்பதாகவும் இதனால் உடல்கள் அழுகிவிட்டதாக அவர்கள் கூறியதால் பிரீசர் பாக்ஸ் கொண்டுவரப்பட்டு சிறுவனின் உடல் வைக்கப்பட்டது. இந்த பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon